search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் செந்தில் பாலாஜி"

    • செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் உள்ளார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ராஜினாமா கடிதம் கொடுக்கப்பட்டது.

    சென்னை:

    கடந்த 2014-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது, போக்குவரத்துக்கழகத்தில் டிரைவர், கண்டக்டர் பணி வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதோடு, அவர்கள் கொடுத்த பணத்தை திரும்ப தராமல் மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில்பாலாஜி மீது குற்றம்சாட்டப்பட்டது.

    இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் செந்தில்பாலாஜி மீது 3 குற்ற வழக்குகளை பதிவு செய்தனர். அந்த வழக்குகள் அனைத்தும் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் இதே விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில்பாலாஜி மீது அமலாக்கத்துறை 2021-ம் ஆண்டு தனியாக ஒரு வழக்கை பதிவு செய்தது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

    இந்த கைது நடவடிக்கையின்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்ட அவருக்கு அங்கு 'பைபாஸ்' அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டார். அமைச்சரை நீக்கும் அதிகாரம் கவர்னருக்கு கிடையாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். மேலும் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என்றும் அவர் அறிவித்தார். அதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி வகித்து வந்த அரசு துறைகள், வெவ்வேறு அமைச்சருக்கு மாற்றி வழங்கப்பட்டன.

    அதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்த உத்தரவை கவர்னர் நிறுத்திவைத்தார்.

    தற்போது, செந்தில் பாலாஜி புழல் சிறையில் உள்ளார். மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கமான ஜாமீன் மனுவை தாக்கல் செய்யுமாறு செந்தில் பாலாஜிக்கு கோர்ட்டு தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து, ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரனையின்போது ஐகோர்ட்டு, செந்தில் பாலாஜி சிறையில் இருக்கும் நிலையில், அவரால் மக்களுக்கு என்ன பிரயோஜனம் என்று கேள்வி எழுப்பியது.

    இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ராஜினாமா கடிதம் கொடுக்கப்பட்டது. அதில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.

    இந்த கடிதம், நேற்று முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து கவர்னர் மாளிகைக்கு அனுப்பப்பட்ட நிலையில், செந்தில்பாலாஜியின் ராஜினாமாவை கவர்னர் ஆர்.என்.ரவி. ஏற்றுக்கொண்டார்.

    முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை ஏற்பதாக கவர்னர் மாளிகை அறிவித்துள்ளது.

     

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வழக்கமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வரும்போது துணை ராணுவப் படையினரை பாதுகாப்பிற்காக அழைத்து வருவது வழக்கம்.
    • செந்தில் பாலாஜி தாய், தந்தையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்:

    சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    கரூர் மாவட்டம் மண்மங்களத்தை அடுத்த ராமேஸ்வரப்பட்டியில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீடு உள்ளது. இந்த வீட்டில் அவரது தாய், தந்தையர் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் அங்கு கேரளா பதிவு எண் கொண்ட காரில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் வந்தனர்.

    அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீட்டுக்குள் சென்ற அவர்கள் சோதனையில் ஈடுபட்டனர். ஏற்கனவே இந்த வீட்டில் பல முறை வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைகள் நடைபெற்ற நிலையில் மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வழக்கமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வரும்போது துணை ராணுவப் படையினரை பாதுகாப்பிற்காக அழைத்து வருவது வழக்கம். அல்லது உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிப்பது வழக்கம்.

    ஆனால், பாதுகாப்பிற்காக துணை ராணுவப்படை வீரர்கள் இல்லாமல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அங்கு வசிக்கும் அவரது தாய், தந்தையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை முடியும் வரை, சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு தொ டர்பான அமலாக்கத்துறையின் விசாரணையை தள்ளிவைக்கக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கில் தீர்ப்பை வரும் 15-ந்தேதிக்கு நீதிபதி அல்லி ஒத்திவைத்தார். இந்த சூழலில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த மனு மீது 15-ந் தேதி தீர்ப்பு கூறப்படும் என நீதிபதி அறிவித்தார்.
    • செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் புழல் சிறையில் இருந்து அவர் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.

    சென்னை:

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கு சென்னை செசன்ஸ் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

    இந்தநிலையில், போக்குவரத்து கழகங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கின் விசாரணை முடிவடையும் வரை, அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கின் விசாரணையை தொடங்கக்கூடாது என்றும், இந்த விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றும் வக்கீல் பரணிகுமார் மூலம் செந்தில் பாலாஜி அதே கோர்ட்டில் புதிய மனுவை தாக்கல் செய்தார்.

    இந்த மனு நீதிபதி அல்லி முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் எஸ்.பிரபாகரன், 'மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கில் செந்தில் பாலாஜி விடுவிக்கப்படும் பட்சத்தில் அமலாக்கத்துறை வழக்கு செல்லாததாகிவிடும்' என வாதாடினார்.

    அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் என்.ரமேஷ், 'வழக்கின் விசாரணையை முடக்கி, குற்றச்சாட்டு பதிவையும், சாட்சி விசாரணையையும் தாமதப்படுத்தும் நோக்கில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல' என வாதாடினார்.

    இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த மனு மீது 15-ந் தேதி தீர்ப்பு கூறப்படும் என நீதிபதி அறிவித்தார்.

    செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் புழல் சிறையில் இருந்து அவர் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.

    அவரது நீதிமன்ற காவலை 15-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.
    • செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி கடந்த ஜனவரி 29ம் தேதி உத்தரவிட்டு இருந்தார்.

    சென்னை:

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இதையடுத்து ஜாமின் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

    இதையடுத்து, பிப்ரவரி 7-ந்தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை மாவட்ட 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    முன்னதாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி கடந்த ஜனவரி 29ம் தேதி உத்தரவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.
    • செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 29ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி கடந்த ஜனவரி 22ம் தேதி உத்தரவிட்டு இருந்தார்.

    சென்னை:

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இதையடுத்து ஜாமின் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

    ஜனவரி 31வரை நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

    முன்னதாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 29ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி கடந்த ஜனவரி 22ம் தேதி உத்தரவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது.
    • சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி தீர்ப்பு.

    சட்ட விரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் மனு தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது.

    3வது முறையாக ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

    • அமைச்சரின் நண்பரான ராயனூர் சுப்பிரமணியத்தின் கரூர்-கோவை சாலையில் உள்ள கொங்கு மெஸ்ஸில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
    • செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கட்டி வரும் புதிய வீட்டை அளவீடு செய்து மதிப்பீடு செய்ய வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர்.

    கரூர்:

    கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, அவரது சகோதரர் அசோக் குமார் வீடு, அலுவலகம் மற்றும் அவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள், வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அமைச்சரின் நண்பரான ராயனூர் சுப்பிரமணியத்தின் கரூர்-கோவை சாலையில் உள்ள கொங்கு மெஸ்ஸிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதனைத்தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி, அந்த மெஸ்சுக்கு சீல் வைத்தனர்.

    பின்னர் சமீபத்தில் அதிகாரிகள் ஒப்பதலுடன் சீல் அகற்றப்பட்டு மெஸ் திறக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மதியம் 7 வருமான வரித்துறை அதிகாரிகள் கொங்கு மெஸ் நிர்வாகத்தினர் பழைய மெஸ் கட்டிடம் அருகாமையில் புதிதாக புதிதாக கட்டி வரும் 4 மாடி கட்டிடத்தை பொறியாளர்களை வைத்து அளந்தனர். மேலும் கட்டிட மதிப்பீட்டை பொறியாளர்கள் உதவியுடன் ஆய்வு செய்தனர்.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று (வியாழக்கிழமை) வருமான வரித்துறை அதிகாரிகளில் ஒரு பிரிவினர் கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கட்டி வரும் புதிய வீட்டை அளவீடு செய்து மதிப்பீடு செய்ய வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர். இதில் 2 கார்களில் வந்த 9 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த வீட்டிலும் ஏற்கனவே வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பூட்டி சீல் வைத்தனர்.

    பின்னர் அந்த கட்டிடத்தின் உரிமையாளர் அங்கு இல்லாததால் சம்பந்தப்பட்டவர் நேரில் ஆஜராக வேண்டும் என நோட்டீசும் ஒட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    செந்தில் பாலாஜியின் நண்பரின் ஓட்டல் கட்டிடத்தை தொடர்ந்து அவரது சகோதரர் கட்டும் புதிய வீட்டினை வருமானவரித்துறை அதிகாரிகள் அளவீடு செய்து மதிப்பீடு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு செந்தில் பாலாஜி ஆஜரானார்.
    • செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடையும் நிலையில் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை வழக்கில் அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதையடுத்து உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

    இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடையும் நிலையில் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு செந்தில் பாலாஜி ஆஜரானார்.

    இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜனவரி 4-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஏற்கனவே ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்திருந்தன.
    • இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார்.

    அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்தது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்க மறுத்தது. இதனைத் தொடர்ந்து, மருத்துவ காரணங்களை சுட்டிக்காட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார். உயர்நீதிமன்றத்திலும் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், மருத்துவ காரணங்கள் அடிப்படையில் ஜாமின் வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் இன்று அவரது ஜாமின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

    அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டபோது, அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    செந்தில் பாலாஜி உடல்நிலை அறிக்கையின்படி, ஜாமினில் வந்தால் மட்டுமே பார்த்துக் கொள்ள முடியும் என்று அவரது உடல்நிலையில் தெரியவில்லை என்று தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதி திரிவேதி தனது தீர்ப்பில்" செந்தில் பாலாஜியின் மூளை பாதிப்பு குறித்து கூகுளில் தேடிப்பார்த்தேன். மருந்து எடுத்துக் கொண்டார், அது சரி செய்யக்கூடியதுதான். இன்று பைபாஸ் சிகிச்சையெல்லாம், அப்பென்டிக்ஸ் ஆபரேசன் போல சாதாரணமாகிவிட்டது. எனவே, மருத்துவ காரணங்களுக்காக செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க முடியாது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்து பார்த்ததில் கனையத்தில் கொழுப்புக் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.
    • இன்னும் 2 நாட்கள் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருப்பார் என தெரிகிறது.

    சென்னை:

    சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

    அவர் அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்பட்டு தூக்கம் இல்லாத காரணத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகியும் இருந்தார். மனரீதியாகவும் அவர் பாதிக்கப்பட்டதால் உடல் எடையும் குறைந்தது.

    இதனால் கடந்த 15-ந்தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் இதயவியல் பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.

    அங்கு அவருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்து பார்த்ததில் கனையத்தில் கொழுப்புக் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அதற்கு சிகிச்சை பெற வேண்டி உள்ளதால் இன்னும் 2 நாட்கள் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருப்பார் என தெரிகிறது.

    இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சரிவர தூக்கம் இல்லாத பிரச்சனை, மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு உள்ளன. கழுத்துவலி, முதுகுவலி, கால்வலி, பிரச்சனைகளும் உள்ளதால் அதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கனையத்தில் கொழுப்பு கட்டி இருப்பதால் அதை மருந்து-மாத்திரைகள் மூலம் சரிப்படுத்த டாக்டர்கள் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். அவருக்கு இன்னும் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டி உள்ளதால் அதன் முடிவுகளை வைத்து அறிக்கை தயாரிக்கப்படும். இந்த அறிக்கை விவரங்கள் நாளை வெளியிடப்படும்.

    இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

    • அடிக்கடி உடல்சோர்வு, படபடப்பு ஏற்படுவதால் சிறையில் அவ்வப்போது அவரது உடல் நிலையை பரிசோதித்து சிகிச்சை மேற்கொண்டு வந்தனர்.
    • செந்தில் பாலாஜியின் மூளை நரம்பில் உள்ள சிறிய அளவிலான ரத்தக்கட்டியை கரைக்க 2 நாட்களாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14-ந்தேதி கைது செய்த போது திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. பின்னர், அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை அடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இருப்பினும், அடிக்கடி உடல்சோர்வு, படபடப்பு ஏற்படுவதால் சிறையில் அவ்வப்போது அவரது உடல் நிலையை பரிசோதித்து சிகிச்சை மேற்கொண்டு வந்தனர்.

    புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் உடனடியாக அவரை ஸ்டான்லி மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.

    அங்கு அவருக்கு எக்ஸ்ரே, ஈ.சி.ஜி. மற்றும் ரத்த மாதிரி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு இருதய பரிசோதனைகளும் மேற்கொள்ள வேண்டி இருந்தது.

    பின்னர், சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜியை அழைத்து வந்தனர்.

    அங்கு, செந்தில் பாலாஜியின் மூளை நரம்பில் உள்ள சிறிய அளவிலான ரத்தக்கட்டியை கரைக்க 2 நாட்களாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று வயிறு, குடல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், நெஞ்சகவியல் நிபுணர்கள் இன்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர்.

    இதை தவிர கழுத்தின் பின்பகுதி சவ்வில் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்யவும் ஓமந்தூரார் பன்னேக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • சிறையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நிலையில், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.
    • மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு நவம்பர் 20-ந் தேதிக்கு தள்ளிவைத்தது.

    புதுடெல்லி:

    சட்டவிரோத பண பரிவர்த்தனை தடைச்சட்ட வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    சிறையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நிலையில், தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.

    இந்த மனுவை ஐகோர்ட்டு கடந்த மாதம் 19-ந் தேதி தள்ளுபடி செய்தது.

    ஜாமின் வழங்க ஐகோர்ட்டு மறுத்த உத்தரவுக்கு எதிராக செந்தில் பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதை நீதிபதிகள் அனிருதா போஸ், பேலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த மாதம் 30-ந் தேதி விசாரித்தது. செந்தில் பாலாஜி மற்றும் அமலாக்கத்துறை சார்பில் விசாரணையை தள்ளிவைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

    அதையடுத்து மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு நவம்பர் 20-ந் தேதிக்கு (இன்றைக்கு) தள்ளிவைத்தது.

    இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் பேலா எம்.திரிவேதி, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட்டு அமர்வு இன்று விசாரிக்கிறது.

    ×